சைக்கிள் ஓட்ட சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் திடீர் மாயம்

விஷால் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். மகன் சையத்காசிமை விஷால் வந்து சந்தித்தார்.
சைக்கிள் ஓட்ட சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் திடீர் மாயம்
Published on

கூடுவாஞ்சேரி மின்வாரியம் அருகே உள்ள விஸ்வநாதபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரபாகர் (45). இவர் சென்னை திருவொற்றியூரில் மாநகர பேருந்து டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி, மகன்கள் தர்ஷன்(17), விஷால்(15) அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், 2வது மகனான விஷால் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலை வீடு திரும்பிய அவர் அதே பகுதியில் உள்ள தெருவில் சைக்கிள் ஓட்டி கொண்டு இருந்தார். பின்னர் ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரை மீனாட்சிபுரத்தில் உள்ள அவரது நண்பரை பார்ப்பதற்காக அங்கிருந்து சைக்கிளில் சென்றார்.

ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரை மீனாட்சிபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த சையதுஅமீன்(45) குரோம்பேட்டையில் மாநகர பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சையத்காசிமை விஷால் வந்து சந்தித்தார். பின்னர் இருவரும் திடீரென்று மாயமானார்கள். கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து திடீரென மாயமான மாணவர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com