புதுச்சேரி சிறுமி படுகொலை- கைது செய்யப்பட்ட இருவர் சிறையில் அடைப்பு

கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணை.
புதுச்சேரி சிறுமி படுகொலை- கைது செய்யப்பட்ட இருவர் சிறையில் அடைப்பு
Published on

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பாக கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பாதுகாப்பு கருதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை முடித்து போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர்.

மேலும், நீதிபதி இளவரசன் சிறை வளாகத்திற்கு சென்று கைது செய்யப்பட்டவர்களை பார்வையிட்டு சிறை காவலுக்கு உத்தரவிட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com