தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக தவெக செயலாளர் சிவா நியமனம்!

பணி நியமண ஆணையோடு முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக தவெக செயலாளர் சிவா நியமனம்!
Published on: 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய தலைவராக வடசென்னை வடக்கு மாவட்ட தவெக செயலாளர் சிவா நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த பூச்சி முருகன் கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த புதிய நியமனம் போடப்பட்டுள்ளது. நியமனத்திற்கான அரசாணை வெளியானதைத் தொடர்ந்து, வி. சிவா தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராகவும், தவெகவின் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தியதிலும் வி. சிவா முக்கியப் பங்காற்றியுள்ளார்.

விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடாமல் இருந்திருந்தால், இவர்தான் அங்கு தேர்தலில் நின்றிருப்பார் என்றும் கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com