பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்க்கு 2 மணி நேரம் அனுமதி

பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள விஜய்க்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.நேரம், போராட்டக்குழு சார்பில் வரையறுக்கப்பட்ட நிலையில் காவல்துறை தரப்பில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்க்கு 2 மணி நேரம் அனுமதி
Published on

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் 900 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்தித்து பேச தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து வரும் 20ம் தேதி அன்று ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து விஜய் ஆதரவு தெரிவிக்கிறார். இதனால் விஜய் சந்திப்பு நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து, பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள விஜய்க்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்நிலையில், வரும் 20ம் தேதி பரந்தூர் செல்லும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 2 மணி நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்குழு மற்றும் மக்களை சந்திக்க விஜய்க்கு, காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நேரம், போராட்டக்குழு சார்பில் வரையறுக்கப்பட்ட நிலையில் காவல்துறை தரப்பில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com