நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது கமிஷனர் அலுவலகத்தில் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு

108 பெண்களை வைத்து என் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வைப்பேன் என்று நாஞ்சில் மிரட்டுவதாக சூர்யா தேவி கூறினார்.
TV Comedian Nanjil Vijayan Row
Published on

நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்:

தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராக நடித்து, அதன்மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சூர்யா தேவி என்பவர் புகார் ஒன்றை அளித்தார்.

இந்த புகார் குறித்து செய்தியாளர்களிடம் சூர்யா தேவி கூறியதாவது :-

கடந்த 2019-இல் நாஞ்சில் விஜயனின் தங்கை திருமணத்திற்காக ரூபாய் 2 லட்சம் கடனாக வழங்கினேன். ஒரு உதவி மனப்பாண்மையில் தான் நான் பணஉதவி செய்தேன்.

கடந்த மூன்று வருடத்திற்கு முன்பே இந்த விஷயத்தை நான் சொல்லி இருந்தால் நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள். இப்பொழுது உள்ள இக்கட்டான சூழலில் எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்தே நான் நாஞ்சில் விஜயனுக்கு போன் செய்து, எனக்கு அவசரமான செலவு ஒன்று உள்ளது என்று கூறினேன். அவர் அதற்கு சரி நான் தருகிறேன் என்றே சொல்லிக்கொண்டு வந்தார்.

எனக்கு சென்னையில் அவர் முகவரி தெரியாது என்பதால் நான் விட்டுவிட்டேன். அவர் எனக்கு போன் செய்தபோதெல்லாம், வாட்ஸ் அப்பில் மட்டுமே தொடர்பு கொண்டார். சாதாரண அழைப்பில் போன் பேசினால், கால் ரெக்கார்டு செய்து விடுவேன் என்பதற்காக கிரிமினலாக அதை தவிர்த்து வந்தார்.

நான் கொடுத்த பணத்திற்கு என்னிடம் ஆதாரம் கிடையாது. நான் அவர் வலசரவாக்கம் வீட்டில் வைத்து தான் கொடுத்தேன். அதற்கான ஆதாரம் என்னிடம் இல்லாததால், அதை மனதில் வைத்துகொண்டு, நான் அவரை மிரட்டுவதாக சிம்பத்தி(அனுதாபம்) ஏற்படுத்துகிறார்.

நான் ஏற்கனவே திருச்சி எஸ்.பி அலுவலத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளேன். அந்த புகார் இங்கு மாற்றப்பட்டதால், நான் இப்போது சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்துள்ளேன். என்னை ஒரு வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்கிறார். ஆட்களை வைத்து என்னை மிரட்டுகிறார்.

மதுரையில் நடந்த எக்ஸ்போ-விற்கு அவர் என்னை அழைத்ததின் பேரில் நான் அங்கு சென்றேன். அப்போது துணி வாங்கியதற்கான பணத்தை நான் கொடுத்தபோது, அது நான் உனக்கு கொடுக்கவேண்டிய பணம்தான் என்று கூறினார்.

இதையடுத்து அந்த எக்ஸ்போ-வை முடித்துவிட்டு நான் வெளியே வந்தபோது, மூன்று பேர்களை வைத்து என்னை மடக்கி பணத்தை கொடுக்காமல் போவதாக வீடியோ எடுத்து என்னை மிரட்டுகிறார். மறுபடியும் இந்த எக்ஸ்போ-விற்கு வந்தால் 108 பெண்களிடம் என்னைகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வைப்பேன் என்று கூறுகிறார்.

நான் அவரிடம் என் பணத்தை பொறுமையாக வாங்கலாம் என்று நினைத்தேன், எனக்கும் குழந்தைகள் உள்ளது. அதனால்தான் புகார் மூலமாகவாவது இதை எடுத்துச் செல்ல இங்கு வந்துள்ளேன்.

அவரை விசாரித்து எனக்கு வரவேண்டிய பணத்தை வாங்கி கொடுத்தால் போதும். அவர் என்னிடம் வாட்ஸ் அப்பில் பேசின அனைத்து பதிவுகளும் என்னிடம் உள்ளது.

இவ்வாறு நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது சூர்யா தேவி என்பவர் குற்றம்சாட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com