தாம்பரம் அருகே ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு

தாம்பரம் ரெயில் நிலையம் அருகே ரெயிலின் என்ஜினின் முன்பக்க சக்கரம் தண்டவாளத்தில் இருந்து இறங்கி தடம் புரண்டது.
தாம்பரம் அருகே ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு
Published on

சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி 16 பெட்டிகளில் ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தபோது தாம்பரம் ரெயில் நிலையம் அருகே ரெயிலின் என்ஜின் முன்பக்க சக்கரம் தண்டவாளத்தில் இருந்து இறங்கி தடம் புரண்டது.

இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் உடனடியாக ரெயிலை நிறுத்தி ஜல்லிக்கற்களுடன் இருந்த பெட்டிகளை துண்டித்தார். இதனால் தாம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்பு வந்த அதிகாரிகள் ரெயில் என்ஜினை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை தண்டவாளத்தில் உள்ள ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்தி புதிய ஜல்லிக்கற்களை மாற்றுவதற்காக ரெயிலில் கொண்டு வரபட்டபோது விபத்து ஏற்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com