ஆன்லைன் ஆப்பில் கடன் வாங்கிய என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவம் நாமக்கல் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ்வரன்.
லோகேஷ்வரன்.
Published on

நாமக்கல்:

நாமக்கல்லை அடுத்த செல்லப்பா காலனியில் உள்ள கீழ் காலனியை சேர்ந்தவர் லோகேஷ்வரன் (வயது22). கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பை முடித்து விட்டு தேர்வு முடிவை எதிர்பார்த்து இருந்தார்.

இந்த நிலையில் லோகேஷ்வரன் ஆன்லைன் செயலி மூலம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது. தவணை தேதி முடிந்ததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதற்காக ஆன்லைன் செயலி நிறுவனத்தார் லோகேஷ்வரனை தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் அவர் முறையாக பதில் அளிக்காததால், லோகேஷ்வரனின் பெற்றோரை, கடன் கொடுத்தவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

இதனால், தான் ஆன்லைனில் கடன் வாங்கியது பெற்றோருக்கு தெரிந்து போனதை அடுத்து மனமுடைந்த லோகேஷ்வரன், வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் லோகேஷ்வரனை மீட்டு நாமக்கல்லில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

தகவல் அறிந்து அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த நாமக்கல் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைனில் கடன் செயலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாமக்கல் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com