சாலையில் மரம் விழுந்து தமிழகம்-கர்நாடக இடையே போக்குவரத்து துண்டிப்பு

போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.தமிழக- கர்நாடக இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையில் மரம் விழுந்து தமிழகம்-கர்நாடக இடையே போக்குவரத்து துண்டிப்பு
Published on

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக ஆசனூரில் இருந்து கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் செல்லும் சாலை அமைந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை மாவள்ளம் பிரிவு அருகே சாலை ஓரத்தில் இருந்த தைய மரம் சாலையில் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆசனூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் 2 மணி நேரத்திற்கு பிறகு மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் தமிழக- கர்நாடக இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com