நிவாரண தொகை குறித்த சந்தேகங்களுக்கு.. இலவச தொலைபேசி எண் அறிவிப்பு

நிவாரண தொகை குறித்த சந்தேகங்களுக்கு.. இலவச தொலைபேசி எண் அறிவிப்பு

நிவாரணம் குறித்த சந்தேகங்களை பொதுமக்களுக்கு தீர்க்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.நிவாரணத் தொகை வழங்கும் பணியை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
Published on

மிச்சாங் புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கும் பணியை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், நிவாரணம் குறித்த சந்தேகங்களை பொதுமக்களுக்கு தீர்க்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் (17.12.2023)காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களின் சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்ள 1100, 044 28592828 ஆகிய இலவச எண்ணை தொடர்புக் கொள்ளலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com