
வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்ட திட்டத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்
வீடுகளின் மாடிகளில் தோட்டம் அமைக்க மானியம் வழங்கும் வகையில் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம்.
8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ.27.82 கோடியில் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்
தொழில்நுட்பமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக நடத்தப்படும் வேளாண் கண்காட்சிக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு
பனைவிதை, பனங்கன்று விநியோகம், பயிற்சி அளித்தல் மற்றும் பனைபொருள் உற்பத்தி கூடாரம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு
விதை சுத்திகரிப்புத்திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.7.1 கோடியில் அமைக்கப்படும்.
17,315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியத்திற்கு ரூ.9.36 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்
மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வெற்றி விவசாயி விருது வழங்கப்படும்.
மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படும்.
மாவட்டந்தோறும் வழங்கப்படும் வெற்றி விவசாயி விருதுக்கு ரூ.67.50 லட்சம் ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்
மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும் என அறிவிப்பு
அஞ்சலையம்மாள் விருதில் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும் - அமைச்சர் வினோத்
ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பை சார்ந்த சிறு குறு விவசாயிகள் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20% கூடுதல் மானியம் - அமைச்சர் வினோத்
மழை, வெயிலில் இருந்து விளைபொருட்களை பாதுகாக்கும் வகையில் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்
நிலத்தடி நீரை பாதிக்கும் சீமை கருவேல மரங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அகற்றும் பணிக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு.
அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்திற்காக ரூ.56.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.36 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்
காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்பு திட்டத்திற்கு ரூ.7.35 கோடி ஒதுக்கீடு
பருத்தி உற்பத்தியை பெருக்கிட பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்காக ரூ.27.21 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்
விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமையை உறுதிப்படுத்த வேளாண் காடுகள் திட்டத்திற்காக ரூ.170.70 கோடி ஒதுக்கீடு
அதிக ஊட்டச்சத்து நிறைந்த சீமைத்தினை, பாப்பரை, குலசாமை பயிர்களின் செயல்விளக்கத் திடல்களுக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு
சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்சாகுபடியை இருமடங்காக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கத்திற்கு ரூ.7.61 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்
சிறுதானியங்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.63.81 கோடி - அமைச்சர் வினோத்
பயறு வகைகள், எண்ணெய் வித்துப்பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்திற்காக ரூ.203.64 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்
ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகளை வழங்க ஏஐ அடிப்படையிலான செயலிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்
நெல் விதை உற்பத்தி மானியத்திற்கு சிறப்பு திட்டம் அறிவித்து ரூ.34.72 கோடி ஒதுக்கீடு
நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்பு திட்டத்திற்கு ரூ.34.72 கோடி ஒதுக்கீடு
இயற்கை உரங்களை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.4.5 கோடி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்
மத்திய மாநில அரசின் பங்களிப்பில் புதிய வேளாண் இயற்கை தொகுப்பை உருவாக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர்
மண்புழு உரக்கூடம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.4 கோடி மதிப்பீட்டில் 1 கோடி விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்படும் - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
உயிர்ம வேளாண் பரவலாக்க சிறப்பு திட்டத்தில் 20,000 ஏக்கருக்கு தலா ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் - அமைச்சர் வினோத்
மண்வள பாதுகாப்புக்கான ஐந்தாண்டு திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு
மண் வளத்தை பாதுகாக்கும் வகையில் 1 லட்சம் பசுந்தாள் உரம் வழங்கப்படும்.
பயிர் காப்பீட்டிற்காக பிரதமர் மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 14 தொகுப்புகளில் ரூ.648 கோடி மாநில நிதி விடுவிப்பு.
இலவச மும்முனை மின்சாரம் திட்டத்திற்கு கட்டண தொகையாக மின்வாரியத்திற்கு ரூ.7,432.58 கோடி வழங்கப்படும் - அமைச்சர் வினோத்
எல்-நினோ தாக்கத்தால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் எல் நினோவால் தமிழ்நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது - அமைச்சர் வினோத்
விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் ரூ.132 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்க முடிவு - அமைச்சர் வினோத்
வேளாண்மை துறையில் பழைய திட்டங்களுடன் சில புதிய திட்டங்களும் தொடங்கப்பட உள்ளது.
நாட்டின் வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்த துறையும் சரியான பாதையில் செல்ல முடியாது.
டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன என்று அமைச்சர் வினோத் கூறினார்.
செயற்கை நுண்ணறிவின் வருகையால் 2021-ம் ஆண்டு முதல் புதிய பரிணாமம் பெற்றது.
வேளாண்மை, விவசாயிகளை பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது - அமைச்சர் வினோத்
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தொடர முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார் - அமைச்சர் வினோத்
வெற்றி விவசாயிகளை கொண்ட வெற்றி தமிழ்நாட்டை உருவாக்குவோம் - அமைச்சர் வினோத்
சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை மட்டும் தாக்கல் செய்யுங்கள் என அமைச்சர் வினோத்துககு சபாநாயகர் அறிவுரை வழங்கினார்.
தமிழகத்தின் தலைப்பு செய்தி முதலமைச்சர் பேசுவதாக இருக்கும் அல்லது முதலமைச்சரை பற்றி பேசுவதாக இருக்கும் - அமைச்சர் வினோத்
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் அமைச்சர் வினோத் முதலமைச்சர் குறித்து புகழ்ச்சியாக பேசியதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோட் சூட் அணிந்த விவசாயி முதலமைச்சர் விஜய் என வேளாண் பட்ஜெட் தாக்கலின்போது அமைச்சர் வினோத் புகழாரம்
சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்
வேளாண் பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை.
வேளாண் பட்ஜெட் இன்று தாக்கலாக உள்ள நிலையில் சட்டசபைக்கு முதலமைச்சர் விஜய் வருகை.
சட்டசபைக்கு திமுக எம்எல்ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து வருகை. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என சாடல்.
தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.