

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இரண்டாம் சுற்று கலந்தாய்வின் தற்காலிக ஒதுக்கீட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்ய மாணவர்களுக்கு 5 வெவ்வேறு தேர்வுகள் வழக்கம் போல் வழங்கப்பட்டுள்ளன. கல்வி ஆலோசகர்களின் கூற்றுப்படி, 'Accept and Upward' (ஏற்றுக்கொண்டு மேல்நோக்கி நகர்தல்) ஆப்ஷனைத் தேர்வு செய்வதற்கு முன் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்கள்:
உங்களின் சாய்ஸ் ஃபில்லிங் பட்டியலில், தற்போது கிடைத்த கல்லூரிக்கு மேலே உள்ள கல்லூரிகளில் உங்களுக்குப் படிக்க விருப்பமில்லை என்றால் அப்வர்ட் தேர்வு செய்யக் கூடாது. அப்வர்ட் தேர்வில் மேல்வரிசையில் உள்ள கல்லூரிகளில் ஏதேனும் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டால், தற்போது கிடைத்துள்ள சீட் தானாகவே ரத்தாகிவிடும்.
உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணிற்கு மேலே நீங்கள் குறிப்பிட்ட கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என உறுதியாகத் தெரிந்தால் அப்வர்ட் கொடுப்பதைத் தவிர்க்கலாம். தற்போது ஒதுக்கப்பட்ட கல்லூரியின் கட்டண விவரங்கள், உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை உங்களுக்கு முழு திருப்தியளித்தால், அதை அப்படியே 'Accept and Join' செய்து உறுதிப்படுத்துவதே பாதுகாப்பானது.
1. தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்து, '5 நாட்களுக்குள்' அருகிலுள்ள TNEA உதவி மையத்திற்குச் சென்று நேரில் சான்றிதழ் சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும். தவறினால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.
2.TFC மையத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதுடன் ரூ. 25,000 முன்பணக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
3. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, 5 நாட்களுக்குள் உங்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணை இணையதளத்தில் வெளியிடப்படும்.
4. இறுதி ஒதுக்கீட்டு ஆணை கிடைத்த 7 நாட்களுக்குள் குறிப்பிட்ட கல்லூரிக்கு நேரில் சென்று சேர்க்கையை உறுதிசெய்ய வேண்டும்.
* TNEA தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை (Tentative Allotment Order)
* 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் (Mark Sheets)
* மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate -TC)
* சாதிச் சான்றிதழ் (Community Certificate)
* முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate - பொருந்துமாயின்)
* வருமானச் சான்றிதழ் (Income Certificate)
* மாணவரின் வங்கி கணக்கு புத்தக நகல் (Bank Passbook)
* பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள்
* சேர்க்கைக் கட்டணம் (ரூ. 25,000)
மாணவர்கள் தங்களது சாய்ஸ் லிஸ்ட்டை மீண்டும் ஒருமுறை கவனமாக ஆய்வு செய்த பிறகே முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.