தொடர் வெடிவிபத்து எதிரொலி: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு

சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.தொடர் ஆய்வு மேற்கொண்டு விதிமீறல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் அதிகாரிகள்.
தொடர் வெடிவிபத்து எதிரொலி: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு
Published on

சென்னை:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

இதுபோன்ற சம்பவம் இனி ஏற்படாமல் தடுக்கும் விதமாக பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள 4 குழுக்களை அமைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தீபாவளி முடியும்வரை பட்டாசு தொழிற்சாலைகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

வருவாய், தீயணைப்புத்துறை, தொழிலக பாதுகாப்பு உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும். தொடர் ஆய்வு மேற்கொண்டு விதிமீறல் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com