

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் விஜய் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் சாஹிப் அவர்களின் மூத்த மகனார் டாக்டர் கே.எம். கல்லீலுர் ரஹ்மான் மறைவெய்திய செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.
அன்பு மகனை இழந்து வாடும் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் சாஹிப் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.