

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து வருகிறார்.
இதில், மீனவர்கள், கால்நடைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளதாவது:-
மீனவர்களுக்கு பணியில் இல்லாத கால உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்படும்.
1.39 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும் பணியில்லா கால உதவித்தொகைக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு.
ஆழ்கடல் மீன்பிடி தொழில் ஊக்குவிப்பிற்காக ரூ.12 கோடி ஒதுக்கீடு.
கால்நடை மருத்துவத்திற்காக ரூ.122 கோடி ஒதுக்கீடு. கால்நடைகள் காப்போம் திட்டத்திற்கு ரூ.31 கோடி ஒதுக்கீடு.
41 கால்நடை மருத்துவமனை கட்டடங்கள், 25 கால்நடை பல்நோக்கு மருத்துவமனைகள், 143 புதிய நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள் அமைக்கப்படும்.
தீவன விதை வங்கிகள் மற்றும் கிடங்குகள் அமைக்க ரூ.6.7 கோடி ஒதுக்கீடு.
மாநிலம் முழுவதும் உள்ள மேய்ச்சல் நிலங்களை மீட்க பட்ஜெட்டில் ரூ.13 கோடி ஒதுக்கீடு.
பசுந்தீவன சாகுபடி ஊக்குவிப்பு திட்டத்திற்காக ரூ.13 கோடி ஒதுக்கீடு. விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டததிற்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.57 கோடி ஒதுக்கீடு.
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு.
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் 5 வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு 100% மானியத்துடன் வழங்கப்படும்.
கைம்பெண், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் 30,000 பேருக்கு 100% மானியத்துடன் 5 வெள்ளாடுகள் வழங்கப்படும்.
மாவட்டம் தோறும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.3200 கோடி ஒதுக்கீடு. பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.