திருவள்ளூர் வாயு கசிவு விவகாரம் - சபாநாயகர் பிரபாகருடன் எதிர்க்கட்சியினர் வாக்குவாதம்

சட்டசபையில் முதலில் பேச அனுமதிக்குமாறு சபாநாயகருடன் எடப்பாடி பழனிசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Speaker JCD Prabhakar
Published on

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 3-வது நாள் நிகழ்வுகள் தொடங்கியது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் ஆலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறி வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் பலியாகினர்.

இந்நிலையில், இறால் பதப்படுத்தும் ஆலை அம்மோனியா கசிவு தொடர்பாக 110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் பேச தொடங்கினார்.

அமைச்சர் பர்வேஷ் விளக்கமளிக்க ஆரம்பித்த நிலையில், அமைச்சர் விளக்கத்திற்கு முன்பாக தங்களை பேச அனுமதிக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், நேரம் தரும்போது உங்கள் பிரச்சனை, அமைச்சரின் விளக்கத்திற்கு பதில் பேசுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கிடையே, சட்டசபையில் முதலில் பேச அனுமதிக்குமாறு சபாநாயகருடன் எடப்பாடி பழனிசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சபை விதிகளுக்கு உட்பட்டு தான் நடக்கிறேன், அமைதி காக்குமாறும் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார். 110 விதியின் கீழ் அமைச்சர் விளக்கம் அளித்த பிறகுதான் வாய்ப்பு வழங்க முடியும் அவர் தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com