திருவள்ளூர் அருகே அமோனியம் வாயுக்கசிவு: 6 பேர் உயிரிழப்பு

சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.
death
Ammonia gas leak
Published on

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் மூச்சு விட முடியாமல் திணறினர். மேலும் சிலருக்கு வாய், மூக்கில் ரத்தம் கசிந்ததால் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இதில் 20-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்த நிலையில், எட்டு பேர் ஊயிருக்கு ஆபத்தான நிலையில் அவதிக்குள்ளாகினர்

இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலியின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, இருவரை கைது செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com