கொடநாடு வழக்கு- அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அவகாசம்

9 பேரை விசாரிக்க அனுமதி கோரிய மனுவை நீலகிரி நீதிமன்றம் அனுமதிக்காததை எதிர்த்து மனு.மேல்விசாரணை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
கொடநாடு வழக்கு- அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அவகாசம்
Published on

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடத்தப்பட்ட மேல்விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு செப்டம்பர் 21ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்தரப்பு சாட்சிகளாக உள்ள 9 பேரை விசாரிக்க அனுமதி கோரிய மனுவை நீலகிரி நீதிமன்றம் அனுமதிக்காததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில், வழக்கில் மேல்விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com