பாலத்திற்கு அடியில் 3 சடலங்கள் மீட்பு: போலீசார் விசாரணை

மேம்பாலத்தின் அடியில் இருந்து இன்று கடும் துர்நாற்றம் வீசியது. அழுகிய நிலையில் பிணமாக கிடந்த 3 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பாலத்திற்கு அடியில் 3 சடலங்கள் மீட்பு: போலீசார் விசாரணை
Published on

மேட்டூர்:

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம்-சின்னப்பம்பட்டி செல்லும் சாலையில் உள்ளது பணிக்கனூர். இங்கு ராஜரத்தினம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அருகே மேம்பாலம் ஒன்று உள்ளது.

இந்த மேம்பாலத்தின் அடியில் இருந்து இன்று கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து தோட்ட உரிமையாளர் ராஜரத்தினம் சென்று எட்டி பார்த்துள்ளார். அப்போது ஒருவர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. அவர்களுக்கு சுமார் 50 முதல் 60 வயது வரை இருக்கும் என்று தெரிய வந்தது.

பிணமாக கிடந்த அவர்கள் அருகில் ஒரு மொபட்டும், மதுபாட்டில், தண்ணீர் இருந்தது. அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. மேலும் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த 3 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com