தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

வழக்கு நீதிபதிகள் எஸ்எஸ் சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலரான வக்கீல் ஹென்றி திபேன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்எஸ் சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை, மதுரை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நிராகரித்து விட்டது. அதனால், தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மதுரை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 1-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com