வங்கக்கடல் பகுதியில் இன்று புயல் உருவாகும் என தகவல்- துறைமுகங்களில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.
(கோப்பு படம்)
(கோப்பு படம்)
Published on

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவுக்குள் புயல் சின்னமாக வலுவடையக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதனால் தென் மேற்கு வங்கக்கடல் பகுதி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், வட இலங்கை கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 90 கி.மீ. வரையிலான வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர்,காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com