சென்னை ரவுடிக்கு போதை ஊசிகளை கடத்தி வந்த இளம்பெண்- இன்ஸ்டாகிராம் தொடர்பால் விபரீதம்

இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு போதை ஊசிகள், போதை மாத்திரைகள் கேட்டது தெரிந்தது.போலீசார் வழக்கு பதிவு செய்து சேலத்தில் யார் மூலம் போதை பொருட்கள் வாங்கப்பட்டது, எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை ரவுடிக்கு போதை ஊசிகளை கடத்தி வந்த இளம்பெண்- இன்ஸ்டாகிராம் தொடர்பால் விபரீதம்
Published on

சென்னை:

பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் நேற்று இரவு எஸ்பிளனேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சிறுமி, இளம் பெண் 3 வாலிபர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து போலீசார் சிறுமி மற்றும் இளம் பெண்ணை எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அனுப்பூரைச் சேர்ந்த சரண்யா (வயது 19) எனத் தெரிந்தது. எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சரித்திர குற்றவாளியான சின்னா என்பவர் சேலத்தில் உள்ள சரண்யாவை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு போதை ஊசிகள், போதை மாத்திரைகள் கேட்டது தெரிந்தது.

மேலும் விசாரணையில் சரண்யாவை அழைத்து வர சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சின்னா காதலியான 16 வயது சிறுமியை அனுப்பி வைத்தது தெரிந்தது. இது தொடர்பாக அரண்மனைக்காரன் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்த போதுதான் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

சரண்யா செல்போனை சோதனை செய்தபோது கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள் குறித்த புகைப்படங்கள் ஆவணங்கள், பண பரிமாற்றம் போன்ற தகவல் சிக்கியது.

இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சேலத்தில் யார் மூலம் போதை பொருட்கள் வாங்கப்பட்டது, எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com