உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 810 காளைகள் பங்கேற்றன.ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு வென்று கார் பரிசு.
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு
Published on

உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

இன்று காலை 7 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 6.15 மணிக்கு நிறைவடைந்தது.

மொத்தம் 810 காளைகள் போட்டியில் பங்கேற்றன.

அமைச்சர் மூர்த்தியின் அறிவுறுத்தல்படி எஞ்சிய காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.

18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் பெற்றுள்ளார். இவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கி பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் இரண்டாம் பரிசு பெற்றார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு வென்று கார் பரிசு பெற்றுள்ளது.

சிறந்த காளையாக 2ம் பரிசுக்கு மதுரை காமராஜபுரம் வெள்ளைக்காளி சௌந்தர் என்பவரின் மாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தற்போது முதல் பரிசு பெறும் கருப்பாயூரணி கார்த்தி, 2022ம் ஆண்டிலும் முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com