கங்கனா கன்னத்தில் அறைந்த காவலருக்கு பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் பரிசு

போராடிய அனைத்து விவசாயிகளும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசினார்.பஞ்சாப் விவசாய சங்கங்கள் குல்விந்தர் கவுருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
கங்கனா கன்னத்தில் அறைந்த காவலருக்கு பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் பரிசு
Published on

சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி தொகுதியில் எம்.பி.யான பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.

பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசி வருகிறார். இதன் காரணமாகவே பெண் காவலர் கங்கானாவை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் எம்.பியாக இருக்கும் ஒருவரை தாக்கியதற்காக கைது நேற்று கைது செய்யப்பட்டார்.

குல்விந்தர் கவுருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. பழம்பெரும் நடிகை சாபனா அஸ்மி உள்ளிட்டோர் கங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் பல்வேறு பஞ்சாப் விவசாய சங்கங்கள் குல்விந்தர் கவுருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் குலவுந்தருக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் மாபெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த காவலருக்கு பெரியார் படம் பொறித்த தங்க மோதிரத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் பரிசாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய தபெதிக நிர்வாகி, "குல்விந்தர் கவுரின் வீட்டு முகவரிக்கு அந்த மோதிரத்தை அனுப்பி வைப்போம். தங்க மோதிரத்தை கொரியர் நிறுவனம் ஏற்கவில்லை என்றால், எங்கள் உறுப்பினர் ஒருவரை ரயிலிலோ அல்லது விமானத்திலோ நேரில் அனுப்பி, பெரியார் குறித்த சில புத்தகங்களுடன் மோதிரத்தை ஒப்படைப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com