இந்து மகா சபையினர் அதிரடி: 150 எருமை மாடுகளை ஏற்றி சென்ற 4 லாரிகள் சிறைப்பிடிப்பு

அதிகாலை 2 மணியளவில் 150-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு 4 லாரிகள் உளுந்தூர்பேட்டை வழியாக வந்தன.சம்பவத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்து மகா சபையினர் அதிரடி: 150 எருமை மாடுகளை ஏற்றி சென்ற 4 லாரிகள் சிறைப்பிடிப்பு
Published on

உளுந்தூர்பேட்டை:

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு எருமை மாடுகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. இவ்வாறு கேரளாவிற்கு கொண்டு செல்லும் எருமை மாடுகள், லாரிகளில் ஏற்றப்பட்டு நள்ளிரவு நேரங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை கடந்து செல்கிறது.

அதேபோல, இன்று அதிகாலை 2 மணியளவில் 150-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு 4 லாரிகள் உளுந்தூர்பேட்டை வழியாக வந்தன.

இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து மகா சபை நிர்வாகிகள் உளுந்தூர்பேட்டையில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த லாரிகளை மடக்கி சிறை பிடித்தனர்.

மாடுகள் சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அதனை பிடித்து வைத்திருப்பதாகவும் புகார் செய்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் 4 லாரிகளையும் சோதனையிட்டனர். லாரி டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து லாரிகளை மடக்கி பிடித்த இந்து மகா சபை நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எருமை மாடுகளை சட்ட விரோதமாக கொண்டு சென்றால், அவைகள் கோசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் லாரி டிரைவர்களிடம் எச்சரித்தனர். இதனை தொடர்ந்து இந்து மகா சபா நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் எருமை மாடுகளை கேரளாவிற்கு கொண்டு செல்வதற்கான ஆவணங்களை போலீசாரிடம் லாரி டிரைவர்கள் காட்டினர். இதைத்தொடர்ந்து லாரிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com