சிறுமியை கடித்த 2 நாய்களையும் 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்- சென்னை மாநகராட்சி நோட்டீஸ்

5 வயது சிறுமியை 2 நாய்கள் கடித்ததில் பலத்த காயம் அடைந்தார் சிறுமியை காப்பாற்றச் சென்ற தாயையும் நாய்கள் கடித்தது
சிறுமியை கடித்த 2 நாய்களையும் 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்- சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
Published on

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை 2 நாய்கள் கடித்ததில் பலத்த காயம் அடைந்தார். சிறுமியை காப்பாற்றச் சென்ற தாயையும் நாய்கள் கடித்தது.

நாய்கள் கடித்ததால் தலையில் படுகாயம் அடைந்த சிறுமி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், சிறுமியை கடித்த 2 நாய்களையும் வீட்டிலிருந்து 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த உரிமையாளருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீஸ் நாயின் உரிமையாளர் புகழேந்தியின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த நோட்டிசில், "நாய்களை உரிமம் இன்றி வளர்த்ததுடன், முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் 7 நாட்களுக்குள் நாய்களை அப்புறப்படுத்த தவறினால் மாநகராட்சி இந்த நாய்களை பறிமுதல் செய்யும் என்றும், நாயின் உரிமையாளர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நாய்களை உரிமையாளர் எங்கிருந்து வாங்கினார் என்பதற்கான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com