தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு

பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 11 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு
Published on

நெல்லை:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நெல்லையின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 11 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடலில் காற்று சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடிக்கு இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com