ஈரோடு- திருச்சி, திருச்சி-பாலக்காடு டவுன் இடையிலான ரெயில் சேவையில் தற்காலிக மாற்றம்!

நாளை 9ம் தேதி மற்றும் 16, 23, 30ம் தேதிகளில் 25 நிமிடங்கள் தாமதமாக மதியம் 1:25 மணிக்கு திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு- திருச்சி, திருச்சி-பாலக்காடு டவுன் இடையிலான ரெயில் சேவையில் தற்காலிக மாற்றம்!
Published on

திருச்சி ரெயில்வே யார்டில் மின் பொறியியல் தொடர்பான பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஈரோடு-திருச்சி, திருச்சி சந்திப்பு- பாலக்காடு டவுன் இடையிலான ரெயில் சேவையில் குறிப்பிட்ட தினங்களில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி ஈரோடு சந்திப்பிலிருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் எண்- 56106 ஈரோடு- திருச்சிராப்பள்ளி பயணிகள் ரெயில் நாளை 9ம் தேதி மற்றும் வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு திருச்சிராப்பள்ளி கோட்டை ரெயில் நிலையத்தை சென்றடையும். பின்னர் திருச்சிராப்பள்ளி கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

இதே போல திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் எண்: 16843 பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், நாளை 9ம் தேதி மற்றும் 16, 23, 30ம் தேதிகளில் 25 நிமிடங்கள் தாமதமாக மதியம் 1:25 மணிக்கு திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com