கொரோனாவால் பாதிக்கப்பட்டு கணவர் இறந்த நாளில் மனைவி விஷம் குடித்து தற்கொலை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த கணவரின் நினைவு நாளில் மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஷம்
விஷம்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கொமரபாளையம், எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி சாந்தி (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

பழனிச்சாமிக்கு கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு மே மாதம் 7ந் தேதி பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார். அன்று முதல் சாந்தி கணவரின் நினைப்பாகவே இருந்துள்ளார்.

பின்னர் சாந்தி தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை சாந்தி வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த அவரது மகன் தாயிடம் விசாரித்தபோது அப்பா கொரோனா காரணமாக இறந்த இதே நாளில் நானும் சாக முடிவெடுத்து விஷம் குடித்து விட்டேன் என்றார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் கார் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சாந்தியை சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சாந்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொரோனா தாக்கம் காரணமாக இறந்த கணவரின் நினைவு நாளில் மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com