தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி 2 ஆயிரத்து 468 மெகாவாட்டாக உயர்வு

கோடை காலத்தில் காற்றாலை மின் உற்பத்தி கைகொடுத்ததால் மின் வாரிய அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காற்றாலை மின் உற்பத்தி
காற்றாலை மின் உற்பத்தி
Published on

தமிழகத்தின் மொத்த மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட்டிற்கும் அதிகமாக உள்ளது. அனல்மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள், காற்றாலைகள் மற்றும் நீர் மின் நிலையங்கள் மூலம் மின் தேவை நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இதில் காற்றாலைகள் மூலம் தமிழகத்தில் அதிகபட்சம் 8,605 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். கோடை காலம் தொடங்கிய நிலையில் தென்மேற்கு பருவகாற்று தீவிரம் அடையாததால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை காற்றாலைகளில் 300 முதல் 500 மெகாவாட் மின்சாரமே கிடைத்தது.

நேற்று முன்தினம் காற்றின் வேகம் அதிகரித்ததால் அதற்கேற்ப காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரித்தது. நேற்று முன்தினம் மாலை காற்றாலைகளில் 2,468 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.

நேற்று காலை காற்றாலை மின் உற்பத்தி 1,035 மெகாவாட்டாக இருந்தது. கோடை காலத்தில் காற்றாலை மின் உற்பத்தி கைகொடுத்ததால் மின் வாரிய அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேநேரம் 2 நாட்களுக்கு முன் 16 ஆயிரத்து 300 மெகாவாட்டாக அதிகரித்த தமிழக மின் தேவை விடுமுறை நாளான நேற்று 13 ஆயிரத்து 850 மெகாவாட்டாக சரிந்தது.

இதையும் படியுங்கள்...ஊட்டி, கோத்தகிரியில் கொட்டி தீர்த்த கனமழை- பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com