நெல்லை-தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் விசைப்படகு மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டார். மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்பிடித்துறைமுகத்தில் மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
நெல்லை-தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 3-ந்தேதி முதல் வருகிற 6-ந்தேதி வரை தென்தமிழகம், மன்னார் வளைகுடா, குமரி கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசும் எனவும், சில நேரங்களில் மணிக்கு 65 கிலோ மீட்டர் அளவில் சூறைக்காற்று வீசலாம் எனவும், இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் விசைப்படகு மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டார். இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்பிடித்துறைமுகத்தில் மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் அனைத்தும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 கடற்கரை மீனவ கிராமங்களில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் சுமார் 10 ஆயிரம் நாட்டு படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com