திருமங்கலம் அருகே பாலத்தின் சுவரில் கார் மோதியது: தாய்-மகன் பலி

சிகிச்சை பலனின்றி கார்த்திக், அவரது தாயார் லட்சுமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நாகலட்சுமி, பிரவீன்குமார், வினோத் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருமங்கலம் அருகே பாலத்தின் சுவரில் கார் மோதியது: தாய்-மகன் பலி
Published on

திருமங்கலம்:

திருப்பூர் ராசய்யா காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் கார்த்திக் என்ற கருப்பசாமி. மாரிமுத்து மனைவி லட்சுமி(43). மற்றொரு மகன் வினோத்(24). உறவினர்கள் ஆனந்த் மனைவி நாகலட்சுமி (37), கருப்பசாமி மகன் பிரவின்குமார்(16).

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை கோவில் திரு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு மாரிமுத்து குடும்பத்தினர் காரில் புறப்பட்டனர். காரை கார்த்திக் ஓட்டினார். இன்று அதிகாலை திருமங்கலம்-விருதுநகர் 4 வழிச்சாலையில் உள்ள கரிசல்பட்டி மேம்பாலத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாக பக்கவாட்டு சுவரில் கார் மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக், அவரது தாயார் லட்சுமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நாகலட்சுமி, பிரவீன்குமார், வினோத் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com