ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்களை இணையதளத்தில் திருத்தம் செய்ய வாய்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்களை இணையதளத்தில் திருத்தம் செய்ய வாய்ப்பு
Published on

சென்னை:

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

தகுதி தேர்வு தாள் 1-க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும், தகுதி தேர்வு 2-க்கு 4 லட்சத்து ஆயிரத்து 886 பேரும் விண்ணப்பித்தனர்.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

வருகிற 11-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இனி வரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட மாட்டாது என வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com