திடீரென மயக்கம் அடைந்த டி.ராஜேந்தர்

தூத்துக்குடி மாவட்டம் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது.பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
திடீரென மயக்கம் அடைந்த டி.ராஜேந்தர்
Published on

தூத்துக்குடி:

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் தேங்கிய மழை நீர் வடிய தாமதமானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் லெவிஞ்சிபுரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிக் கொண்டு இருந்த இயக்குனர் டி.ராஜேந்தர் திடீரென மயக்கம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தினர். இதையடுத்து அவரை நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com