சிறுமுகையில் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை

சிறுமுகையில் போலீஸ் ஏட்டு குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சிறுமுகை:

தூத்துக்குடி மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ்.

இவரது மகன் தாமோதரன் (41). தலைமைக் காவலர். இவர் தற்போது மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்

இவருக்கும் பிரியா என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு பிரேமிதா(13) என்ற மகளும்,கார்த்திக்(8) என்ற மகனும் உள்ளனர். இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை ஆலாங்கொம்பு பகுதியில் குடியிருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு சென்ற தாமோதரன் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை இவரது வீடு வெகுநேரமாக பூட்டப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, தாமோதரன் தூக்கி தொங்கி கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியான அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிறுமுகை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று போலீஸ்காரர் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமைக்காவலர் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com