வெளிநாட்டு பணம் பறிமுதல்
வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.97 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்- பயணியிடம் விசாரணை

வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பணம் எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று பயணியிடம் விசாரணை நடந்து வருகிறது.
Published on

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் புறப்பட்ட தயாராக இருந்தது.

அதில் பயணம் செய்யவந்த பயணிகள் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஆண் பயணி ஒருவரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பயணியை தனியாக அழைத்து விசாரித்தனர். அவரது பையை சோதனையிட்ட போது கட்டு, கட்டாக வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் இருந்தன.

மொத்தம் ரூ.97.46 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு நோட்டுகள் இருந்தன. இது பற்றி பயணியிடம் விசாரித்த போது பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பணம் எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று பயணியிடம் விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com