சேலத்தில் கள்ளக்காதலியை குத்தி கொலை செய்துவிட்டு வெள்ளிப்பட்டறை தொழிலாளி தற்கொலை

திருமணம் செய்யாமலேயே 2 பேரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலத்தில் கள்ளக்காதலியை குத்தி கொலை செய்துவிட்டு வெள்ளிப்பட்டறை தொழிலாளி தற்கொலை
Published on

சேலம்:

சேலம் திருமலைகிரி அருகே உள்ள கருப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). இவரது மனைவி அமுதா (40). இவர்களுக்கு 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவனை பிரிந்த அமுதா கடைசி மகன் பிரகாஷூடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (35) என்பவருடன் அமுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் தங்கராஜ் அடிக்கடி அமுதாவின் வீட்டிற்கு சென்று வந்தார். மேலும் இருவரும் வெளிப்பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்தனர்.

அப்போது அவர்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து திருமணம் செய்யாமலேயே 2 பேரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

நேற்று தங்கராஜ் வழக்கம் போல் அமுதாவின் வீட்டிற்கு சென்றார். மகன் பிரகாஷ் தச்சு வேலைக்கு சென்று விட்டதால் இரவில் தங்கராஜூம் அமுதாவும் வீட்டில் ஒன்றாக தங்கி இருந்ததாக தெரிகிறது.

இன்று காலை வேலைக்கு சென்று திரும்பிய பிரகாஷ் வீட்டின் கதவை வெகுநேரமாக தட்டியுள்ளார். கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் கூறினார். இதையடுத்து அங்கு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

பின்னர் பிரகாஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அமுதா உடலில் கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். மேலும் அவரது அருகில் தங்கராஜூம் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தார்.

அமுதாவை கத்தியால் குத்தி கொன்று விட்டு தங்கராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் தங்கராஜ் அமுதாவுக்கு அதிக அளவில் பணத்தை செலவு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன வேதனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த மோதலில் அமுதாவை கொன்று தங்கராஜ் தற்கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com