திருச்சி விமான நிலையத்தில் ரூ.64.51 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தும் குருவிகளாக வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.64.51 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
Published on

கே.கே.நகர்:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தும் குருவிகளாக வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது.

இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது மலேசியாவை சேர்ந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது உடலில் மறைத்து பேஸ்ட் வடிவிலான 1025.12 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 64.51 லட்சம் ஆகும்.

இதனை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com