அரசு பேருந்து- ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து

பேருந்தின் மீது திடீரென சாய்ந்த மின்கம்பத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பேருந்து- ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அரண்மனை பகுதியிலிருந்து இன்று வழக்கம் போல அரசு பேருந்து ஆற்றங்கரை என்ற பகுதி சென்று விட்டு ராமநாதபுரம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றி வந்து கொண்டிருந்தது. அப்போது ஆட்டோவும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளனது.

விபத்தின் போது பேருந்தின் மீது திடீரென சாய்ந்த மின்கம்பத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com