வடபழனி- கோடம்பாக்கம் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

மெட்ரோ பணியின் காரணமாக பள்ளம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வடபழனி- கோடம்பாக்கம் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்
Published on

சென்னை:

சென்னை வடபழனியில் இருந்து கோடம்பாக்கம் செல்லக்கூடிய பிரதான சாலையாக இருக்கக்கூடிய ஆற்காடு சாலையில் இன்று காலை திடீரென பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.

வடபழனி கோவிலில் இருந்து கோடம்பாக்கம் செல்லக்கூடிய பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்திற்கு முன்பாக தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சீர்செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ பணியின் காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து மிகுந்த சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்துள்ளனர். இதனால் உடனடியாக பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com