தீப்பெட்டி தராத பெட்டி கடைக்காரர்.. ஆத்திரத்தில் அரிவாள்மனையால் வெட்டிய நபர்

படுகாயம் அடைந்த செல்வி பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீப்பெட்டி தராத பெட்டி கடைக்காரர்.. ஆத்திரத்தில் அரிவாள்மனையால் வெட்டிய நபர்
Published on

இன்றைய காலகட்டத்தில் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்து செல்லுதல் உள்ளிட்ட அடிப்படை மனப்பக்குவம் இல்லாததால் கொலை, அடிதடி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இதிலும் மது குடிக்க பணம் தராததால் கொலை, பக்கத்து வீட்டாரிடம் ஏற்பட்ட முன்விரோதம் உள்ளிட்ட சொற்ப காரணங்கள் இன்றைக்கு நடைபெறும் கொலைகளுக்கு காரணமாக அமைகிறது.

அப்படி ஒரு சம்பவம் தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. செண்பகராமன்புதூர் பகுதியில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் செல்வி. இவரது கடைக்கு நேற்று செல்வன் என்பவர் வந்தார். அவர் செல்வியிடம் புகைப்பிடிக்க தீப்பெட்டி தருமாறு கூறியுள்ளார்.

செல்வி தீப்பெட்டியை தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வன், செல்வியை அரிவாள்மனையால் சரமாரி வெட்டியுள்ளார். செல்வியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வருவதை கண்ட செல்வன் அங்கிருந்து தப்பியோடினார்.

இதையடுத்து படுகாயம் அடைந்த செல்வி பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com