தோரணமலை முருகன் கோவிலில் ரஷியா-உக்ரைன் போர் விலக வேண்டி சிறப்பு பிரார்த்தனை

உக்ரைன்-ரஷியா போர் விலகி, அமைதி திரும்ப வேண்டி தோரணமலை முருகன் கோவிலில் இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
தோரணமலை கோவிலில் இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றபோது எடுத்தபடம்
தோரணமலை கோவிலில் இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றபோது எடுத்தபடம்
Published on

பாவூர்சத்திரம்:

தென்காசி-கடையம் சாலையில் பிரசித்தி பெற்ற தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உக்ரைன்-ரஷியா போர் விலகிடவும், இந்திய மாணவர்கள் மற்றும் மக்கள் நலமுடன் நாடு திரும்பவும், போர் நாட்டு மக்கள் நிம்மதி வாழ்வு வாழவும் இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஓதுவார் மூர்த்தி சங்கரசட்டநாதன் தேவாரம், திருப்பாவை பாடினார்.

மேலும் நாள் முழுவதும் மலை மேல் உள்ள முருகனுக்கு போர்விலக கோரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள், கலந்து கொண்டனர். அனைத்து பக்தர்கள், பொதுமக்கள் அவரவர் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை நடத்திட வேண்டுமென தோரணமலை பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com