சென்னை நகர தெருக்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக் கொடிகள், போஸ்டர்கள் அகற்றம்

சுவர்களில் எழுதப்பட்ட கட்சி விளம்பரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.சென்னையில் 3 தொகுதிகளிலும் 944 இடங்களில் 3,719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
சென்னை நகர தெருக்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக் கொடிகள், போஸ்டர்கள் அகற்றம்
Published on

சென்னை :

பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து சென்னையில் கட்சி கொடிகள், பதாகைகள், போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. சுவர்களில் எழுதப்பட்ட கட்சி விளம்பரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2 தினங்களில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக்கொடிகள், பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன. விதிகளை மீறி சுவர்களில் எழுதப்படும் கட்சி விளம்பரங்களும் அழிக்கப்பட்ட பிறகு அந்த கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் 3 தொகுதிகளிலும் 944 இடங்களில் 3,719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அந்த பகுதிகளில் உள்ள கொடி கம்பங்கள் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன.

அதுபோல சென்னையில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி ஆகிய 3 இடங்கள் அருகிலும் கட்சி கொடிகள் இல்லாதவாறு விளம்பரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

நேற்று மட்டும் சுமார் 5,200 இடங்களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. 2931 போஸ்டர்கள், 149 பேனர்கள் அதிரடியாக சென்னை மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com