காரை மடக்கிய அதிகாரிகள்... பவுடர் தான் இருக்கு.. பூசிக் கொள்கிறீர்களா... மன்சூர் அலிகான்

மேல்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். காரில் எதுவும் இல்லாததால் கார் பதிவு எண் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரங்களை பறக்கும் படையினர் சேகரித்தனர்.
காரை மடக்கிய அதிகாரிகள்... பவுடர் தான் இருக்கு.. பூசிக் கொள்கிறீர்களா...  மன்சூர் அலிகான்
Published on

வேலூர்:

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது அவர் அடிக்கும் காமெடி கலாட்டாவிற்கும் பஞ்சமில்லை.

மன்சூர் அலிகான் என்றாலே மக்கள் தானாக சிரிக்கும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் உள்ளன. நேற்று குடியாத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக மன்சூர் அலிகான் காரில் சென்றார்.

மேல்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த மன்சூர் அலிகான் காரை வழிமடக்கி சோதனையிட்டனர்.

காரில் எதுவும் இல்லாததால் கார் பதிவு எண் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரங்களை பறக்கும் படையினர் சேகரித்தனர். அப்போது நடிகர் மன்சூர் அலிகான் முகத்துக்கு போட்டுக் கொள்ளும் பவுடர் தான் இருக்கிறது.. பூசி கொள்கிறீர்களா... என அதிகாரிகளை பார்த்து கேட்டார்.

அதனை கேட்டதும் சிரித்துக்கொண்டே அதிகாரிகள் அவரது காரை விடுவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com