இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்கள் 25 பேருக்கு காவல் நீட்டிப்பு

எல்லை தாண்டி வந்ததாக கூறி அந்த படகுகளில் இருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர். பாம்பன் மீனவர்கள் 25 பேரும் இன்று காலை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்கள் 25 பேருக்கு காவல் நீட்டிப்பு
Published on

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 1-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அதிகாலையில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குட்டி ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் 4 நாட்டு படகுகளையும் சுற்றி வளைத்தனர்.

பின்னர் எல்லை தாண்டி வந்ததாக கூறி அந்த படகுகளில் இருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர். பின்னர் அவர்கள் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் காவல் இன்றுடன் முடிவடைந்தது.

இதையடுத்து பாம்பன் மீனவர்கள் 25 பேரும் இன்று காலை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com