ஒண்டி வீரன் நினைவு தபால் தலையை தமிழக ஆளுநர் வெளியிட்டார்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவில் பங்கேற்று நினைவு தபால் தலையை வெளியிட்டார்.தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இதைப் பெற்றுக் கொண்டார்.
ஒண்டி வீரன் நினைவு தபால் தலையை தமிழக ஆளுநர் வெளியிட்டார்
Published on

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவில் பங்கேற்று நினைவு தபால் தலையை வெளியிட்டார்.

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இதைப் பெற்றுக் கொண்டார். மத்திய தகவல் தொடர்பு துறை இணை மந்திரி தேவுசிங் ஜெய்சிங்பாய் சவுகான், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ஏ.நாராயணசாமி, தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் எஸ்.ராஜேந்திர குமார் மற்றும் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com