வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய நிவாரணம் அறிவிப்பு

கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் வழங்கப்படும். 16 கிராமங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய நிவாரணம் அறிவிப்பு
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ துவரம் பருப்பு நிவாரணமாக வழங்க மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் வழங்கப்படும். குடும்ப அட்டை அடிப்படையில் பொருட்களை வழங்குவதை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய, அனைத்து வட்ட அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரத்தில் 16 கிராமங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com