மது பாட்டிலில் பல்லி- குடிமகன்கள் வாக்குவாதம்

டாஸ்மாக் கடையில் நேற்று இரவு ஒருவர் மது பாட்டிலை வாங்கிச் சென்றார்.குடிமகன்கள் வாக்குவாதம் செய்தனர்.
மது பாட்டிலில் பல்லி- குடிமகன்கள் வாக்குவாதம்
Published on

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வீரகமோடு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

இந்த கடையில் நேற்று இரவு ஒருவர் மது பாட்டிலை வாங்கிச் சென்றார். அப்போது அதனை திறந்து பார்த்தபோது அந்த மது பாட்டிலில் பல்லி இறந்து கிடந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அந்த டாஸ்மாக் கடைக்கு சென்று இந்த மது பாட்டிலில் பல்லி உள்ளது. இதை மாற்றித் தரும்படி கேட்டார்.

இதற்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் மூடி திறந்த நிலையில் உள்ளது. இதனை நாங்கள் எப்படி நம்புவது மேலும் மது பாட்டிலை எதற்காக திறந்து எடுத்து வந்தீர்கள். அப்படியே எடுத்துக் கொண்டு வர வேண்டியது தானே என பல்வேறு கேள்விகளை கேட்டனர். அவர்களிடம் குடிமகன்கள் வாக்குவாதம் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த நபர் தனது செல்போனில் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்தார்.

மேலும் நான் மது போதையில் இருக்கிறேன். தெரியாமல் பல்லி விழுந்த பாட்டிலில் உள்ள மதுவை நான் குடித்திருந்தால் இந்த நேரம் செத்துபோய் இருப்பேன். எனது சாவுக்கு யார் காரணம்? என பல்வேறு கேள்விகளை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com