அரூரில் மர்ம காய்ச்சலுக்கு ஐ.டி.ஐ மாணவர் பலி

கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலுக்காக அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிரி சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில் கிரி எந்தவிதமான உணர்வு இல்லாமல் இருந்ததால் அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
அரூரில்  மர்ம காய்ச்சலுக்கு ஐ.டி.ஐ மாணவர் பலி
Published on

அரூர்:

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சூரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகரசன். இவரது மகன் கிரி (22). இவர் அரசு ஐ.டி.ஐ முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இவர் கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலுக்காக அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் சிகிச்சை முடிந்து நேற்று காலை வீடு திரும்பியுள்ளார். மீண்டும் அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு இன்று மாலை ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்த போது இளைஞர் கிரிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில் இளைஞர் கிரி எந்தவிதமான உணர்வு இல்லாமல் இருந்ததால் அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.

பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் அளித்துள்ளனர். மர்ம காய்ச்சலால் ஐடிஐ மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com