கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பொருள்

பொதுமக்கள் யாரும் சென்று விடாதபடி சில அடி தூரத்திற்கு ரிப்பன் கட்டி பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர். மர்ம பொருளை ஆய்வு செய்து அதனை அப்புறப்படுத்திடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பொருள்
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாயக்கர் குப்பம் மீனவர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பல்வேறு குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் இந்த கிராம கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. சுமார் 1அடி நீளமும், 6 இன்ச் விட்டமும் கொண்ட வெள்ளை நிற அந்த மர்ம பொருளின் மேலே டேஞ்சர் எனவும், நாட்டச் நோட்டிபை போலீஸ் என எழுதப்பட்டுள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் இது குறித்து உடனடியாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கும், பூம்புகார் கடற்கரை போலீசார்க்கும் தகவல் அளித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற கடலோர பாதுகாப்பு போலீசார் மர்ம பொருளைப் பார்வையிட்டு அதன் அருகே பொதுமக்கள் யாரும் சென்று விடாதபடி சில அடி தூரத்திற்கு ரிப்பன் கட்டி பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர். மேலும் அந்த மர்ம பொருளை ஆய்வு செய்து அதனை அப்புறப்படுத்திடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com