மூலக்கொத்தளத்தில் ரெயில்வே சுரங்க பாதையில் மழை நீரில் சிக்கிய மாநகர பஸ்

சுரங்க பாதையில் பஸ் சென்ற போது தேங்கியுள்ள மழை நீரில் பஸ் சிக்கிக் கொண்டது.மெட்ரோ வாட்டர் ஊழியர்கள் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் அப்புறப்படுத்தி வருகிறார்கள்.
மூலக்கொத்தளத்தில் ரெயில்வே சுரங்க பாதையில் மழை நீரில் சிக்கிய மாநகர பஸ்
Published on

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள மூலக்கொத்தளம் ரெயில்வே சுரங்கபாதையில் விடிய விடிய பெய்த மழையால் மழை நீர் தேங்கி உள்ளது. இன்று காலை சென்னை செங்குன்றத்தில் இருந்து திருவொற்றியூர் நோக்கி மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது.

மூலக்கொத்தளம் சுரங்க பாதையில் பஸ் சென்ற போது தேங்கியுள்ள மழை நீரில் பஸ் சிக்கிக் கொண்டது. பஸ்சில் இருந்த பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்டு வேறு ஒரு பஸ்சில் அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் தண்ணீரில் சிக்கிக் கொண்ட பஸ்சை வாகனம் மூலம் இழுத்து அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மெட்ரோ வாட்டர் ஊழியர்கள் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com